செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 17 ஜூன் 2019 (12:07 IST)

பணம் கொடுத்து படுக்கைக்கு அழைக்கும் விஷால்- சத்தியம் செய்த ஸ்ரீரெட்டி!

கடந்த ஆண்டு கோலிவுட், டோலிவுட்டில் உள்ள பல முன்னணி நடிகர்கள் மீது சரமாரியான பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறியதுடன், அரை நிர்வாண போராட்டத்தை நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் தான்  தான்  நடிகை ஸ்ரீ ரெட்டி.  

தெலுங்கு திரையுலகில் அடுக்கடுக்காய் பல இயக்குனர்கள், நடிகர்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டைக் கூறி பரபரப்பை கிளப்பினார். இதனால் அவரை தெலுங்கு சினிமா உலகினர் ஓரங்கட்டிவிட சென்னைக்குள் தஞ்சம் புகுந்தார் ஸ்ரீரெட்டி. பின்னர் தமிழ் சினிமாவிலும் இயக்குநர் முருகதாஸ், சுந்தர்.சி, ராகவா லாரன்ஸ் பற்றியும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தார்.
 
அந்தவகையில் தற்போது நடிகர் விஷால் பற்றி தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கும் ஸ்ரீரெட்டி, "நீங்கள் பல பெண்களை ஏமாற்றியிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். உங்களுக்கு உண்மையாகவே தைரியம் இருந்தால் எந்த பெண்ணையும் தான் ஏமாற்றவில்லை என்பதை நிரூபித்து காட்டுங்கள் என கூறி பரபரப்பை  ஏற்படுத்தியதோடு , 
 
 

விஷால் ஒரு ஏமாற்றுவாதி. என் அம்மாவின் மீதும், எனது தொழிலின் மீதும் சத்தியம் செய்து சொல்லுகிறேன். இதற்காக நீங்கள் என் வாழ்க்கையை அழித்தாலும் சரி அல்லது என்னைக் கொன்றாலும் சரி, அப்போதும் நான் சொல்லுவேன் விஷால் ஒரு ஏமாற்றுக்காரர்தான்.
 
 
மேலும் விஷாலுடன் படங்களில் நடிக்க பல பெண்கள் அவருடன் உறவுவைத்திருக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள். நீங்கள் பணம் கொடுத்து உறவு வைத்துக்கொள்கிறீர்கள் என்பதும் எனக்கு தெரியும். அதே நேரத்தில் அந்த பெண்களை உங்களுக்கு யார் சப்ளை செய்கிறார்கள் என்பதும் தெரியும்” என்று தனது பதிவில் காட்டமாக விமர்சித்துள்ளார்.
 
நடிகர் சங்க தேர்தல் விறுவிறுப்பாக நடைபெறவுள்ள நிலையில் பாண்டவர் அணி விஷால் மீது ஸ்ரீரெட்டி வைத்துள்ள இந்த குற்றச்சாட்டு நடிகர் , நடிகைகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.