திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (14:48 IST)

பாலிவுட்டில் நடந்த அரசியலைக் கடந்து விட்டேன்… பிரியங்கா சோப்ரா!

பாலிவுட்டின் முக்கிய நடிகையாக வலம்வந்த பிரியங்கா சோப்ரா, கடந்த சில ஆண்டுகளாக ஹாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்க பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் அவர், ”பாலிவுட்டில் நடந்த அரசியல்களை என்னால் சமாளிக்க முடியவில்லை என்பதால் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

அவருடைய இந்த வார்த்தைகள் பாலிவுட் சினிமாவில் பெரும் விவாதத்தை எழுப்பியது. இதுகுறித்து பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை கூறிவருகின்றனர். குறிப்பாக நடிகை கங்கனா ரனாவத், “ஒரு சிறந்த நடிகையை பாலிவுட்டிலிருந்து ஒதுக்கி வைத்ததற்கு கரண் ஜோஹர்தான் காரணம்” என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இப்போது தனக்கு நடந்ததை மன்னித்துக் கடந்து விட்டதாக பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். அதில் “இப்போதும் என் கடந்த காலத்தை பற்றி பேசும் அளவுக்கு நம்பிக்கையாக இருக்கிறேன். எனக்கு நடந்ததை நினைத்தால் கோபமாக இருக்கும். ஆனால் இப்போது அதை நான் கடந்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.