”வாடி என் தங்க செல” - பிரியங்கா சோப்ராவுக்கு சிலை வைத்த லண்டன் மியூசியம்

priyanka chopra
Last Modified புதன், 19 ஜூன் 2019 (19:20 IST)
பிரியங்கா சோப்ராவுக்கு சிலை வைத்து அசத்தியிருக்கிறது லண்டன் மெழுகு சிலை அருங்காட்சியகமான மெடாம் துசாட்ஸ்.

இந்திய சினிமாவிலிருந்து பிரபலமாகி ஹாலிவுட்டுக்கு சென்றவர் பிரியங்கா சோப்ரா. தமிழில் விஜய் நடித்த ”தமிழன்” படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் தமிழில் அதற்கு பிறகு அவர் நடிக்கவில்லை. இந்தியில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமான இவர் ஹாலிவுட்டிலும் நுழைந்தார். ஜோனாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். யுனிசெஃப் அமைப்பின் குழந்தைகள் நல தூதராக செயல்பட்ட பிரியங்கா சோப்ராவுக்கு சமீபத்தில் விருதும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது பிரியங்கா சோப்ரா தங்க நிற உடையில் ஜொலிஜொலிப்பது போல அச்சு அசலான சிலையை வடிவமைத்திருக்கிறது லண்டனில் உள்ள மெடாம் துசாட்ஸ். இவர்கள் ஏற்கனவே ஜாக்கிசான், ஷாருக் கான், சச்சின் போன்ற பிரபலங்களுக்கும் மெழுகு சிலை தயாரித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சிலையின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :