புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 15 ஜூன் 2019 (10:45 IST)

லிட்டில் சமீராவுடன் கடற்கரையில் கியூட் போட்டோஷூட் நடத்திய சமீரா ரெட்டி!

1980 ஆம் ஆண்டு ஹைத்ராபாத்தில் பிறந்த சமீரா ரெட்டி பாலிவுட் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “மெய்னி தில் துஜ்கோ  தியா” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அஜித் நடித்த சிட்டிசன் படத்தில்  துணை கதாபாத்திரத்தில் நடித்து பிறகு   கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “வாரணம் ஆயிரம் ” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரீட்சியமானார். 
 
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துவந்த சமீரா முன்னணி நடிகையாக வலம் வர முடியாததால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்தவர் சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார். 
 
பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்த நடிகை சமீரா சினிமாவில் கவனித்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார். தற்போது இரண்டாவது முறையாகவும் தாயாகியுள்ளார். சமீபத்தில்  பேட்டி ஒன்றில் என் மகனுக்கு ஒரு தங்கை வேண்டுமென கடவுளிடம் வேண்டிக்கொண்டான் எனவே நிச்சயம் எனக்கு மகள் தான் பிறப்பால் என நெகிழ்ச்சியோடு கூறியிருந்தார். 


 
இந்நிலையில் சமீபநாட்களாக தான் கர்பமாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வரும் சமீரா ரெட்டி தற்போது கடற்கரையில் அழகான போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறீர்கள்.