வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 20 ஜனவரி 2021 (13:30 IST)

ஸ்டார் நடிகைகளை ஓரம் கட்டும் பிரியங்கா மோகன் - சூர்யாவுக்கு ஜோடி!!

சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

 
சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளியான சூரரைப் போற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து சூர்யா கவுதம் மேனன் இயக்கத்திலும், பாண்டிராஜ் இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 
 
பாண்டிராஜ் இயக்கும் படத்தை தயாரிக்கிறது சன் பிக்சர்ஸ். படத்தின்   ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்து வருகிறார்.