1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (22:38 IST)

கண்சிமிட்டல் பிரியாவாரியர் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உத்தரவு

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ஒரே ஒரு கண் சிமிட்டலின் மூலம் வைரலானவர் மலையாள நடிகை பிரியாவாரியர். இவர் நடித்து வரும் 'ஒரு ஆடார் லவ்' என்ற படத்தின் டீசரில் இவருடைய புருவ டான்ஸ் மற்றும் கண்சிமிட்டல் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனது
 
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் ஒரு குறிப்பிட்ட மதத்தை அவமதிக்கும்படி இருப்பதாக மும்பை மற்றும் ஐதராபாத் காவல்நிலையங்களில் புகார் மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுக்களின் அடிப்படையில் பிரியாவாரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
 
இந்த நிலையில் தன்மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் தனது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் பிரியாவாரியர் உச்சநீதிமன்றத்தில் மனுதாகக்ல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஒப்புக்கொண்ட உச்சநீதிமன்றம் நாளையே இந்த மனுமீதான விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டுள்ளது.