1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 27 ஜனவரி 2021 (18:20 IST)

அருண்விஜய் படத்தில் ப்ரியா பவானிசங்கர்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கவிருக்கும் திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர் இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே அருண் விஜய்யுடன் மாஃபியா என்ற படத்தில் பிரியா பவானி சங்கர் நடித்து உள்ளார் என்பது தெரிந்ததே. மேலும் தற்போது பிரியா பவானி சங்கர், கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’, ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் மற்றும் சிம்பு நடிக்கும் பத்து தல’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது