வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 13 ஜனவரி 2021 (20:30 IST)

பாஜகவினர் நுழைய தடை: போர்டு வைத்த ஹரியானாவின் 60 கிராம மக்கள்!

பாஜகவினர் நுழைய தடை: போர்டு வைத்த ஹரியானாவின் 60 கிராம மக்கள்!
மத்திய அரசு சமீபத்தில் அமல் செய்த வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் உள்பட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்
 
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு தீவிர முயற்சி செய்தும் முடியாமல் போனது. இந்த நிலையில் தற்போது சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் குழு அமைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்த பாஜகவினர் தங்களுடைய கிராமத்தில் நுழையக்கூடாது எனஹரியானாவில் உள்ள 60 கிராம மக்கள் போர்டு வைத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அதையும் மீறி பாஜகவினர் உள்ளே வர முயற்சி செய்தால் அவர்களை அந்த கிராமத்தினர் மிரட்டி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது