1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 26 ஜனவரி 2021 (17:01 IST)

சூர்யாவின் அடுத்த படத்தில் இணைந்த அருண்விஜய்!

சூர்யாவின் அடுத்த படத்தில் இணைந்த அருண்விஜய்!
தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் அருண்விஜய் தான் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சூர்யாவின் அடுத்த படத்தில் அருண்விஜய் நடிக்க இருப்பதாக தெரிகிறது
 
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அருண் விஜய் மகன் அர்னவ்விஜய் நடிக்கும் திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது. சரத் சண்முகம் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஊட்டியில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படப்பிடிப்பை பார்ப்பதற்காக அருண்விஜய் ஊட்டிக்கு செல்வதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த படத்தில் அர்னவ் அருண் விஜய்க்கு தந்தையாக அருண் விஜய் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
இந்த படத்திற்காக 14 நாட்கள் கால்சீட் அருண்விஜய் கொடுத்திருப்பதாகவும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சூர்யா தயாரிக்கும் படத்தில் அருண்விஜய் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது