1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 12 ஜூலை 2021 (12:21 IST)

டாப் நடிகருக்கு ஜோடி... இனிமேல் சம்பளம் கொட்டி கொடுங்கன்னு கேட்பாங்களே!

பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மீடியா உலகில் நுழைந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து பிரபலமானார். அதனை தொடர்ந்து வெள்ளி திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 

அதையடுத்து கடைக்குட்டி சிங்கம், மாஃபியா , மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், இந்தியன் 2 , ஓமணப்பெண்ணே , ருத்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பூலோகம் படத்தை இயக்கி வெற்றிகண்ட கல்யாண் கிருஷ்ணன் ஜெயம் ரவியை வைத்து இயக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக கமிட்டாகியிருக்கிறார். உச்ச நடிகர் படத்தில் கதாநாயகியாக நடிப்பதால் அம்மணியின் மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்துவிடும். இனிமேல் தயாரிப்பாளர்களிடம் சம்பளமும் அதிகமாக கேட்பார் போல என முணு முணுக்கிறது கோலிவுட்.