வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 12 ஜூலை 2021 (11:45 IST)

அம்மாவுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்... அர்ச்சனாவுக்கு என்ன ஆச்சு?

பிரபல தொகுப்பாளினியாக அர்ச்சனா 90ஸ் காலத்து பிரபலமான ஆங்கராக பார்க்கப்பட்டவர். அதன் பின் திருமணம் செய்துக்கொண்டு சொந்த வாழ்வில் செட்டில் ஆன அர்ச்சனா மீண்டும் தொலைக்காட்சியில் ஜொலிக்க ஆரம்பித்தார். 
 
விஜய் டிவியில் தனது மகள் சாராவுடன் சேர்ந்து சூப்பர் மாம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வேற லெவல் ஹிட் கொடுத்தார். அதன்முலம் கிடைத்த பிரபலத்தை வைத்து பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் அவரது நடவடிக்கைகள் மக்களுக்கு பிடிக்காததால் வெறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். 
 
இன்னுமும் அவர் மீதான நெகட்டிவ் எண்ணங்கள் மக்களுக்கு அப்படியே தான் இருக்கிறது. அதனால் அவர் சமூகவலைத்தளங்களில் ஏதெனும் வீடியோ வெளியிட்டால் கிண்டல் விமர்சனங்கள் நிறைய குவிகிறது. இந்நிலையில் அர்ச்சனாவுக்கு மண்டையோட்டில் ஆப்ரேஷன் நடந்துள்ளது. அதுகுறித்து மகள் சாரா, " அம்மா தற்போது சாதாரண சிகிச்சை பிரிவிற்கு வந்துவிட்டார். அவர் நலமாக இருக்கிறார். விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.