வடிவேலுவுடன் நடிக்கிறாரா பிரியா பவானி சங்கர்?

Last Modified செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (15:54 IST)
நடிகை பிரியா பவானி சங்கர் இப்போது பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

வடிவேலுவின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி. இந்த படத்தில் நடிக்க வடிவேலு தயங்கிய போது அவருக்கு நம்பிக்கை அளித்து நடிக்க வைத்தவர் அந்த படத்தின் தயாரிப்பாளரான ஷங்கர். இந்நிலையில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் அந்தப்
படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிய போது மீண்டும் அதே கூட்டணி இணைந்தது.

ஆனால் பட உருவாக்கத்தின் போது ஷங்கருக்கும் வடிவேலுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. இதையடுத்து அந்த படம் கைவிடப்பட்டது. இதனால் ஷங்கரைப் பற்றி வடிவேலு பல இடங்களில் விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில் இப்போது பிரச்சனை எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் வடிவேலுவுக்கு ஜோடி கிடையாது. ஆனால் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகையிடம் பேசி வருவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அது பிரியா பவானி சங்கராக இருக்க வாய்ப்பு அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :