வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (11:14 IST)

உன் கணவர் ரத்தத்தோடுதான் வருவார்… பெண்ணை பீதியாக்கி தாலியை ஆட்டைய போட்ட நபர்!

சென்னையை அடுத்து பெண் ஒருவரிடம் மாந்த்ரீகம் செய்வதாக சொல்லி தாலியை திருடி சென்றுள்ளார் ஒரு நபர்.

சென்னை ஐஸ் அவுஸ் பகுதியைச் சேர்ந்த ரிஹானா பேகம் என்ற பெண்ணுக்கு திருமணம் ஆகி ஒரு மாதமே ஆகியுள்ளது. இந்நிலையில் அவர் வீட்டுக்கு சாம்பிராணி போடுபவர் போல வந்தவர் அவரிடம் ‘இன்று உன் கணவர் வீட்டுக்கு வரும் போது இரத்தக் காயத்தோடுதான் வருவார்’ என்று கூறி பீதியைக் கிளப்பியுள்ளார்.

அப்படி அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பூஜை செய்யவேண்டும் என சொல்லி அந்த பெண்ணின் தாலியை வாங்கி பேப்பரில் மடித்து ஒரு பானையில் போட்டு பூஜை செய்வது போல ஏமாற்றியுள்ளார். பின்னர் அந்த பானையைக் கொடுத்து ஒரு மணிநேரம் கழித்து பானைக்குள் இருக்கும் தாலியை எடுத்துக்கொள்ள சொல்லி சென்றுவிட்டார். அந்த பெண் ஒருமணி நேரம் கழித்து பானையில் பார்த்தபோது தாலி இல்லை. இதையடுத்து தான் ஏமாந்ததை உணர்ந்த பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.