வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (11:01 IST)

மைதானத்துக்குள் வந்து பந்தைக் கவ்விச் சென்ற நாய்… வைரலாகும் புகைப்படம்!

கிரிக்கெட் மைதானத்துக்குள் புகுந்து பந்தைக் கவ்விச் சென்ற நாயை வீராங்கனைகள் துரத்தி பிடித்து பந்தைக் கைப்பற்றினர்.

அயர்லாந்து நாட்டில் இப்போது ஆல் அயர்லாந்து டி20 பெண்கள் போட்டி தொடர் நடந்து வருகிறது. அப்போது போட்டியின் போது நாய் ஒன்று எதிர்பாராத விதமாக மைதானத்துள் வந்து பந்தைக் கவ்வி ஓடியது. வீராங்கனைகள் அந்த நாயை சுற்றி வளைத்து பந்தை மீட்டனர். பின்னர் அந்த நாய் மைதானத்தை விட்டு அகற்றப்பட்டது. இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.