லவ் டுடே படத்தின் இயக்குனர் பிரதீப்பிடம் வாய்ப்புக் கேட்ட நடிகர்… சுவாரஸ்யமான சம்பவம்!
சமீபத்தில் வெளியான லவ்டுடே திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும், 5 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் இதுவரை 50 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே கதையை பிரதீப் ஆப் லாக் என்ற பெயரில் குறும்படமாக எடுத்து நடித்திருந்தார். அந்த படத்தை பார்த்து ப்ரமோட் செய்யும்படி, பல தமிழ் சினிமா பிரபலங்களையும் டிவிட்டரில் டேக் செய்து வேண்டுகோள் விடுத்திருந்தார். அதில் நகைச்சுவை நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரனும் ஒருவர்.
இந்நிலையில் இப்போது அந்த ட்வீட்களை ரசிகர்கள் வைரல் ஆக்க, பிரேம்ஜி அமரன் பிரதீப்பை டேக் செய்து, “உங்கள் அடுத்த படத்தில் எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள்” எனக் கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் இப்போது வைரல் ஆகி வருகிறது.