விஜய் சேதுபதியின் DSP படத்தின் முதல் சிங்கிள் ‘நல்லா இருமா’ ரிலீஸ் அப்டேட்!
விஜய் சேதுபதி நடித்து ள்ள 46வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் டிசம்பர் மாதத்தில் இருக்கும் என சொலல்ப்படுகிறது. இந்த படத்தில் சேதுபதி மற்றும் செக்க சிவந்த வானம் ஆகிய திரைப்படங்களுக்குப் பின்னர் விஜய் சேதுபதி மீண்டும் காவல்துறை அதிகாரியாக இந்த படத்தில் நடித்து இருந்தார் என்பதும் அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் அனு கீர்த்திவாஸ் நடித்திருக்கிறார்.
இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் மூலமாக தயாரித்திருந்தது. ஆனால் படத்தின் முதல் லுக் போஸ்டரில் சன் பிக்சர்ஸ் பெயர் இடம்பெறவில்லை. இதற்கான காரணம் என்ன வென்று தெரியவில்லை.
இந்நிலையில் டிசம்பர் ரிலீஸை ஒட்டி இப்போது படத்துக்கான ப்ரமோஷன் பணிகள் தொடங்கியுள்ளன. இதையடுத்து படத்தின் முதல் சிங்கிள் பாடலான நல்லா இருமா என்ற பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது.