திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 10 மார்ச் 2021 (13:09 IST)

வதந்திகளை பொய்யாக்கிய தியாகராஜன்: இன்று முதல் ‘அந்தகன்’ படப்பிடிப்பு!

வதந்திகளை பொய்யாக்கிய தியாகராஜன்: இன்று முதல் ‘அந்தகன்’ படப்பிடிப்பு
பிரசாந்த் நடிப்பில் அவரது தந்தை தியாகராஜன் தயாரிப்பில் பொன்மகள்வந்தாள் திரைப்படத்தின் இயக்குனர் பெடரிக் இயக்கத்தில் அந்தகன் என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றிபெற்ற அந்தாதூன் என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் தபு நடித்த முக்கிய வேடத்தில் சிம்ரன் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் கார்த்திக் இந்த படத்தில் இணைந்தார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த படம் குறித்து கடந்த சில வாரங்களாக வேண்டுமென்றே சிலர் வதந்தியை பரப்பி வந்தனர். இந்த படத்தில் உள்ள இயக்குனர் தொழில்நுட்ப கலைஞர்கள் படத்திலிருந்து விலகி விட்டதாகவும் எனவே இந்த படம் டிராப் என்றும் கூறப்பட்டது 
 
ஆனால் வதந்திகளை பொய்யாக்கும் வகையில் இன்று தியாகராஜன் இந்த படத்தின் பூஜையை தொடங்கினார். சற்று முன் இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜையில் தியாகராஜன், சிம்ரன், பிரசாந்த், உள்ளிட்ட பலர் இந்த பூஜையில் கலந்து கொண்டனர். இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது