திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 17 ஜூன் 2024 (18:41 IST)

சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் ஆகிறாரா விலங்கு வெப் சீரிஸ் புகழ் பிரசாந்த் பாண்டியராஜ்?

விமல் நடிப்பில் விலங்கு என்ற வெப்சீரிஸ் ஜி 5 தளத்தில் வெளியாகி அவருக்கு ரி எண்ட்ரியாக அமைந்தது. இந்த வெப் சீரிஸை புரூஸ் லி படத்தை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்திருந்தார். தமிழில் வெளியான வெப் சீரிஸ்களில் குறிப்பிடத்தக்க ஒரு சீரிஸாக விலங்கு அமைந்தது.

இந்த ஒரே சீரிஸில் பிரசாந்த் பாண்டியராஜ் புகழ் வெளிச்சத்துக்கு வந்தார். இப்போது அவர் பல வெப் சீரிஸ்களுக்கு ஷோ ரன்னராக இருக்கிறார். இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.

அவர் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் சூர்யா நடித்து, அதை தயாரிக்கவும் உள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வரும் அதன் பின்னர் பிரசாந்த் படத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது. அதன் பின்னரே வாடிவாசல் திரைப்படம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.