திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 9 மார்ச் 2021 (09:15 IST)

தயாரிப்பாளர் தொல்லை… மொத்தமாக வெளியேறும் படக்குழுவினர்! அதிர்ச்சியில் பிரசாந்த்!

பிரசாந்த் நடிக்க இருக்கும் அந்தகன் படத்தின் இருந்து இயக்குனர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் வெளியேற இருப்பதாக சொல்லப்படுகிறது.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’அந்தாதூன்’ என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் பிரசாந்த் நடிக்க உள்ளார் . அந்தகன் என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த படத்தை அவரது தந்தை தியாகராஜன் தயாரிக்கும் பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜே ஜே பிரட்ரிக் இயக்க ஒப்பந்தமானார். இந்த படத்தின் ப்ரோமோவை கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிட்டது படக்குழு. 

ஆனால் இன்னமும் படப்பிடிப்பு தொடங்கவில்லையாம். இந்நிலையில் அந்த படத்தின் இயக்குனர் ஜே ஜே பிரட்ரிக் விலகியுள்ளதாக ஒரு செய்தி பரவ ஆரம்பித்துள்ளது. இதற்குக் காரணம் தயாரிப்பாளர் தியாகராஜன் இயக்கத்தில் அதிகமாக குறுக்கீடு இருப்பதே காரணம் என்று சொல்லப்படுகிறது.

அதே போல படத்துக்காக ஒப்பந்தமான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணும் விலகப் போவதாக அறிவித்துள்ளாராம். இதனால் தரணி போன்ற மூத்த இயக்குனர்களிடம் பேசி வருகிறாராம் தியாகராஜன். நீண்ட நாட்களுக்குப் பிறகு தனக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என காத்திருந்த பிரசாந்துக்கு இந்த செய்திகள் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.