இரவு நேர பிசினஸில் இறங்கிய பிரபல ஹீரோயின்
தமிழில் சகுனி மூலம் பிரபலமடைந்த நடிகை ப்ரணிதா தற்போது புதிதாக பிசினஸ் ஒன்று தொடங்கியுள்ளார்.
தமிழில் சினிமாவில் சகுணி மூலம் பிரபலமடைந்த நடிகை ப்ரணிதா, தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை. இவர் தற்போது தொழிலதிபராக மாறியுள்ளார். பெங்களூர் நகரில் பூட்லெக்கர் எனும் பெயரில் பப் ஒன்றை தொடங்கியுள்ளார். விண்டேஜ் முறையில் விடுதியின் உட்பகுதி டிசைன் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர் நகரில் குறைந்த விலையில், சிறப்பான முறையில் சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இவர் பெங்களூரில் தொடங்கியுள்ள பிசினஸ் வெற்றியடையும் பட்சத்தில் ஹைதரபாத் மற்றும் சென்னையிலும் பப் தொடங்க உள்ளதாக இருக்கிறாராம்.