வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 24 நவம்பர் 2020 (11:38 IST)

பாலகிருஷ்ணா படத்தில் இருந்து விலகிய ஆர்யா மனைவி!

பாலகிருஷ்ணா படத்தில் இருந்து நடிகை சாயிஷா விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் போயபடி சீனு இயக்கத்தில் ஒரு படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் என கூறப்பட்டது. இந்நிலையில் இதற்காக பல்வேறு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு. 

கடைசியாக இவருக்கு ஜோடியாக சாயிஷா சைகல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை அதிகாரபூர்வமாகப் படக்குழு அறிவித்துள்ளது. 60 வயதாகும் பாலகிருஷ்ணாவுக்கு 23 வயதான சாயிஷா ஜோடியாக நடிப்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விஷயம் விவாதிக்கப்பட்ட நிலையில் அந்த படத்தில் இருந்து சாயிஷாவும் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இது போல பிசாசு நாயகி பிரயாகா அந்த படத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.