ஞாயிறு, 8 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 27 ஜூலை 2024 (15:47 IST)

தனுஷுக்கு நன்றி தெரிவித்த பிரகாஷ் ராஜ்… ராயன் டீம் மீட்!

நடிகர் தனுஷ் நடித்து, இயக்கியுள்ள அவரின் 50 ஆவது படமான ‘ராயன்’இன்று வெளியாகியுள்ள நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரத்தொடங்கியுள்ளன. படத்தில் தனுஷோடு சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

படம் வெளியாகி முதல் நாள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனாலும் படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் இப்போது வரத்தொடங்கியுள்ளன. இந்நிலையில் ராயன் படம் உலகளவில் முதல் நாளில் 12.5 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் படக்குழுவினர் அனைவரும் தனுஷ் வீட்டில் சந்தித்த புகைப்படத்தை பிரகாஷ் ராஜ் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து தனுஷுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் “ராயன் படத்துக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். இயக்குனர் தனுஷுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.