1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 26 ஜூலை 2024 (11:06 IST)

First Half கொஞ்சம் சுமார்.. ஆனா Second Half! எஸ்.ஜே.சூர்யா வேற லெவல் நடிப்பு..!? – ராயன் படம் ஹிட்டா? ரசிகர்கள் சொல்வது என்ன?

Raayan Movie
நடிகர் தனுஷ் நடித்து, இயக்கியுள்ள ‘ராயன்’ படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் படத்திற்கு பல தரப்பிலிருந்து பாசிட்டிவ் ரிவ்யூக்கள் வரத் தொடங்கியுள்ளது.



தமிழ் சினிமாவில் ஐக்கானிக் நடிகராக உள்ள தனுஷ் ஹாலிவுட் வரை தனது தடத்தை பதித்திருக்கிறார். சமீபமாக தமிழில் வெளியான தனுஷ் படங்கள் போதிய வரவேற்பை பெறாமல் இருந்து வந்தது. கடந்த பொங்கலை ஒட்டி வெளியான கேப்டன் மில்லர் பெரும்பாலானோரை ஈர்க்கவில்லை.

இந்நிலையில் நடிகர் தனுஷ் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தானே எழுதி, இயக்கி, நடித்து ‘ராயன்’ படத்தை உருவாக்கியுள்ளார். முன்னதாக தனுஷ் எழுதி, இயக்கிய ராஜ்கிரண் நடித்த ‘பவர் பாண்டி’ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தனுஷ் மீண்டும் இயக்கி, நடித்தும் உள்ள இந்த படம் ரசிகர்களை கவருமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்துள்ளதாக காலையிலிருந்து வரும் ரசிகர்களின் கருத்துகளில் இருந்து தெரிகிறது.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும், தனுஷின் அசுர நடிப்பும், இயக்கமும் படத்தை மாஸாக மாற்றியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். படத்தின் முதல் பாதி அதிக ட்ராமாவுடன் ஸ்லோவாக தொடங்கினாலும் இனெட்ர்வல் ப்ளாக்கில் பற்றிக்கொள்ளும் பரபரப்பு இரண்டாவது பாதி முழுவதும் தொடர்வதாக பலரும் பாசிட்டிவ் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இதில் வில்லனாக நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யாவுக்கு ரசிகர்களிடையே மேலும் வரவேற்பு அதிகரித்துள்ளது. படத்திற்கு படம் எஸ்.ஜே.சூர்யா தன்னை மேறுகேற்றிக் கொண்டே செல்கிறார். அவருக்கென தனி ரசிகர்கள் உண்டாகியுள்ளனர். அந்த அளவு வில்லன் ரோலில் இறங்கி கலக்குகிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Edit by Prasanth.K