செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 1 ஏப்ரல் 2020 (08:07 IST)

வாலு பொண்ணுங்க சார்... இணையத்தை கலக்கும் சாண்ட்ரா - பிரஜின் தம்பதியின் இரட்டை குழந்தை!

சின்னத்தம்பி சீரியல் மூலம் பலரது ஃபேவரட் நடிகராக மாறியவர் ப்ரஜின். இவரின் மனைவி சாண்ட்ரா தலையணை பூக்கள் உள்ளிட்ட சில தொடர்களில் நடித்துள்ளார். மீடியா உலகில் கடினப்பட்டு வாய்ப்பை தேடிய இவர்கள் இருவரும் வெள்ளித்திரை, சின்னத்திரை என வலம் வந்தார்கள்.  

காதலித்து  திருமணம் செய்துகொண்ட இவர்கள் குடும்பத்தின் வறுமையால் கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை பெற்றுக்கொள்ளாமல் வாழ்க்கையை தேடி ஓடி செட்டில் ஆன பிறகு பின்னர் கடந்த இரட்டிப்பு மகிழ்ச்சியாக இரட்டை குழந்தை பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் தற்போது தனது அழகிய மகள்கள் மித்ரா - ருத்ரா இருவரின் முதலாம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு "வாலு பொண்ணுங்க" என குறிப்பிட்டுள்ளார்.  இந்த அழகிய புகைப்படம் அனைவரையும் ஈர்த்து வருகிறது.