1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : சனி, 11 ஜனவரி 2020 (11:41 IST)

கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் கொள்ளை அழகில் சுற்றிவந்த ரெஜினா..!

தென்னிந்த திரைப்பட நடிகையான ரெஜினா கசாண்ட்ரா கண்ட நாள் முதல், அழகிய அசுரா, பஞ்சமிர்தம், சிவா மனசுல சுருதி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், இராஜதந்திரம் உள்ளிட்ட படங்களில்  நடித்துள்ளார். கன்னடம் , தமிழ் , தெலுங்கு , ஹிந்து உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ள கவர்ச்சி கன்னியாகவலம் வந்துகொண்டிருக்கிறார். 
 
இவர் தற்போது மோகன்லால் நடிக்கும் Big Brother என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறர். இந்த படம் வருகிற 16ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. பொதுவாக நடிகைகள் பொது இடங்களுக்கு வருவதெல்லாம் தலைப்பு செய்தியாக பேசப்படுமளவிற்கு அடிக்கடி ஏதாவது ஒன்றை செய்தே மீடியாவின் கண்களுக்கு பிரகாசமாக தெரிவார்கள். 
 
அந்தவகையில் சமீபத்தில் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு சென்ற நடிகை ரெஜினா கசாண்ட்ரா கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் அளவான கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களின் கண்களுக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.