வெள்ளி, 28 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 28 பிப்ரவரி 2025 (14:16 IST)

நான்கு இயக்குனர்களின் படங்கள் வந்தால்தான் சந்தோஷமாக இருக்கும் – இளையராஜா பகிர்ந்த தகவல்!

தமிழ் சினிமாவில் அறிமுகம் தேவையில்லாதவர்களில் ஒருவர் இசையமைப்பாளர் இளையராஜா. லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரையும், அவரது பாடல்களையும் தங்கள் மூச்சுக்காற்றாகவே நினைத்து வருகின்றனர். தன்னுடைய 82 ஆவது வயதிலும் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டும் உலகம் முழுவதும் சுற்றி வந்து இசைக் கச்சேரிகள் செய்வது என்றும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் தான் சிம்பொனி ஒன்றை உருவாக்கி வருவதாக இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ’valiant’ எனப் பெயரிடப்பட்டுள்ள அவரின் முதல் சிம்பொனியை சமீபத்தில் பதிவு செய்துள்ளார். இது இசைக் கலைஞர்களோடு அவர் ஒத்திகைகள் பார்த்த வீடியோ இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றது. விரைவில் இந்த சிம்பொனி இசை கச்சேரி லண்டனில் உள்ள ஒரு இசையரங்கில் நடக்கவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது “80 களில் நான் அதிகப் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் பாலு மகேந்திரா, மகேந்திரன், பாரதிராஜா மற்றும் மணிரத்னம் ஆகியோர்களின் படங்கள் இசையமைக்க வரும்போது “அப்பாடா” என்று நிம்மதியாக இருக்கும் “ எனக் கூறியுள்ளார்.