1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 17 நவம்பர் 2022 (08:44 IST)

விஜய், யுவன் மற்றும் சச்சினை விமர்சித்த பிரதீப்பின் பழைய பதிவுகள்… தோண்டி எடுத்து வைரல் ஆக்கும் நெட்டிசன்ஸ்!

சமீபத்தில் வெளியான லவ்டுடே திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும், 5 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் இதுவரை 50 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் பல ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் இருந்து விஜய், யுவன் மற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் ஆகியோரைக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். அந்த பதிவுகளை எல்லாம் தோண்டி எடுத்து இப்போது வைரல் ஆக்கினர் நெட்டிசன்ஸ். அதனால் தனது கணக்கையே நிரந்தரமாக மூடிவிட்டு சென்றுள்ளார் பிரதீப்.