1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: செவ்வாய், 13 ஜூன் 2023 (18:54 IST)

பல வருடங்களுக்கு பின் பிறந்த மகளுக்காக அந்த விஷயத்தை செய்யப்போகும் பிரபு தேவா!

பிரபல நடிகரும்  நடன இயக்குநருமான பிரபு தேவா ரமலத் என்ற பெண்ணை 1995⁠ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் நயன்தாராவுடன் நெருக்கமாக பழகி காதலித்து அவருடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்ததால் முதல் மனைவிக்கு மனக்கசப்பு ஏற்பட்டு ⁠2011ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். 
 
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடிக்க நயன்தாரா மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டார். அதன் பின்னர் இது சரிவராது என நயன்தாரா- பிரபு தேவா ஜோடி பிரிந்தனர். பின்னர் கொரோனா காலகட்டத்தில் மும்பையில் ஹிமானி சிங் என்ற பிசியோதெரபிஸ்ட் உடன் அவருக்கு நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது.
 
பின்னர் அவரை ரகசிய முறையில் திருணம் செய்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் பிரபுதேவா - ஹிமானி சிங் ஜோடி திருப்பதி கோயில் தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் இந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பிரபுதேவா குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை என்பதால் மொத்த குடும்பம் மகிழ்ச்சியில் இருக்கிறதாம். 
 
இந்நிலையில் தற்போது ஒரு பேட்டியில் பேசி இருக்கும் பிரபுதேவா, நான் உட்பட எங்கள் குடும்பமே இப்போது மகிழ்ச்சியாக உள்ளது. என் மகளுக்காக நான் என்னுடைய முழு நேரத்தையும் செலவிட திட்டமிட்டுள்ளேன். இவ்வளவு வருஷங்களாக வாழ்க்கையில் நிற்காமல் ஓடிய நான் மகளுக்காக இதை செய்கிறேன்" என கூறி இருக்கிறார்.