ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: செவ்வாய், 13 ஜூன் 2023 (13:40 IST)

அர்னவ் மாதிரியே இருக்கு பாப்பா... குழந்தையின் முகத்தை காட்டிய திவ்யா - குவியும் லைக்ஸ்!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கேளடி கண்மணி என்ற சீரியல் சீரியலில் நடித்துப் பிரபலமானவர் திவ்யா. இவர் அதே சீரியலின் ஹீரோவான அர்னவ்வை காதலித்து திருமணம் செய்யாமலே கர்ப்பம் ஆனார். அதன் பின்னர் இருக்கும் பயங்கர சண்டை ஏற்பட்டது. 
 
திவ்யா தன் கணவர் அர்ணவ் தன்னை அடித்துத் துன்புறுத்துவதால், தன் கரு எப்போது வேண்டுமானாலும் கலையலாம் என ஒரு வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். அதன் பின்னர் 3 மாதக் கருவைக் கலைக்க  நடிகை திவ்யா ஸ்ரீதர் முயற்சி செய்வதாக கணவர் அர்னவ் போலீஸில் புகாரளித்தார். 
Preview
 
பின்னர் அர்னவ் வேறு நடிகையுடன் ரகசிய உறவில் இருப்பதாகவும், அதனால் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் கூறி ஆதாரத்தை வெளியிட்டார். இதனால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின்னர் அர்னவ்வின் குழந்தையை திவ்யா பெற்றெடுத்தார். இந்நிலையில் மகளின் முகத்தை முதன்முறையாக காட்டியுள்ளார். இதில் குழந்தை அர்னவ் போன்றே உள்ளதாக நெட்டிசன்ஸ் பலரும் கூறி வருகிறார்கள்.