1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 7 டிசம்பர் 2021 (07:15 IST)

பிரபுதேவாவின் ‘தேள்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

பிரபுதேவா நடித்த ‘தேள்’ என்ற திரைப்படம் டிசம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது என்பதும் அதற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாக இருந்த ‘தேள்’ திரைப்படம் திடீரென ஒத்திவைக்கப்படுவதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது 
இதுகுறித்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: எதிர்பாராத சில காரணத்தினால் ‘தேள்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படுகிறது. 
 
புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்களுடைய ஒத்துழைப்புக்கு மிகவும் நன்றி. விரைவில் சந்திப்போம் என தெரிவித்துள்ளது 
 
பிரபுதேவா நடிப்பில் ஹரி குமார் என்பவர் இயக்கத்தில் உருவாகிய இந்த திரைப்படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் திடீரென இந்த படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது