வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 6 டிசம்பர் 2021 (18:42 IST)

விக்னேஷ் சிவன், நயன்தாராவின் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த திரைப்படம் ஒன்றின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
காதலர்களான விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார்கள். இந்த நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களில் ஒன்று ராக்கி
 
இந்த படத்தில் பாரதிராஜா, வசந்த் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் அருள் மாதேஸ்வரன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் டிசம்பர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் படம் திரையரங்குகளில் வெளியாவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.