செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By Mahendran
Last Updated : திங்கள், 6 டிசம்பர் 2021 (19:40 IST)

அதிகாரத்தில் உள்ள எல்லாரும் அடியாள் தான்: ‘ரைட்டர்’ டீசர் ரிலீஸ்!

சமுத்திரக்கனி நடித்த ‘ரைட்டர்’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி உள்ளது
 
சமுத்திரகனி, திலீபன், ஹரிகிருஷ்ணன், சுப்பிரமணியம் சிவா உள்பட பலர் நடித்த திரைப்படத்தை டைரக்டர் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை பிராங்கிளின் என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த டீசரில் ஒரு ரைட்டர் காவல் நிலையத்தில் அனுபவிக்கும் அவமானங்கள் வெட்டவெளிச்சமாக காட்டப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
நீலம் புரடொக்சன் நிறுவனத்தின் மற்றொரு வெற்றிப் படமாக இந்த படம் அமையும் என்பது இந்த படத்தின் டீசரில் இருந்து தெரிய வருகிறது