செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (19:25 IST)

சம்பளத்தில் ரஜினியை மிஞ்சும் பிரபாஸ்??

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிக சம்பளம் பெறும் நடிகராக உள்ளார். ஆனால், தற்போது ஒரே படத்தில் பிரபலமடைந்த பிராபஸின் சம்பளம் ரஜினியை மிஞ்சும் அளவிற்கு கொடுக்கப்படுகிறதாம்.


 
 
பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் உலக அளவில் வசூல் படைத்ததால், பிரபாஸ் இமேஜ் பில்டப் ஆகியிருக்கிறது. தற்போது பிரபாஸ் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். 
 
இப்படத்தில் அவருக்கு ரூ.30 கோடி பேசப்பட்டுள்ளது. இதை தவிர்த்து படத்தின் விற்பனையிலும் குறிப்பிட்ட சதவீத ஷேரை பிராபஸுக்கு தர படதரப்பு ஒப்புக்கொண்டுள்ளதாம். 
 
இவை அனைத்தையும் குத்துமதிப்பாக கணக்கிட்டால் பிரபாஸின் சம்பளம் ரஜினி இதுவரை பெற்ற சம்பளத்தை மிஞ்சும் என்று கூறப்படுகிறது.