1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 4 ஜூன் 2022 (14:46 IST)

ஒன்று கூடிய பேன் இந்தியா ஸ்டார்ஸ் பிரபாஸ் & யாஷ்… வெளியான வைரல் புகைப்படங்கள்!

KGF இரண்டு படங்களின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் பிரசாந்த் நீல்.

பாகுபலி படங்களுக்கு பிறகு இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி1,2 ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து அவர் புகழும் பெருகிறது. மார்க்கெட்டும் எகிறியது.  சூப்பர் ஸ்டார் அளவுக்கு அளவு இமேஜும் ஏகத்தும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கே ஜி எஃப் திரைப்படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அடுத்து சலார் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை கேஜிஎஃப் திரைப்படத்தைத் தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்நிலையில் தற்போது பிரசாந்த் நீலின் பிறந்தநாளை முன்னிட்டு யாஷ் மற்றும் பிரபாஸ் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.