யாஷின் அடுத்த படமும் கேங்ஸ்டர் படமா? இயக்குனர் இவர்தான்!
யாஷ் நடிப்பில் கே ஜி எஃப் 2 ரிலிஸாகி ஒரு ஆண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில் இன்னும் தனது அடுத்த படத்தை யாஷ் அறிவிக்கவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது. பல மொழி இயக்குனர்கள் யாஷுக்குக் கதை சொல்லியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்போது நடிகையும் இயக்குனருமான கீது மோகன்தாஸ் இயக்கத்தில்தான் அடுத்து யாஷ் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கீது மோகன்தாஸ் ஏற்கனவே லையர்ஸ் டைஸ் படத்தை இயக்கி கவனம் குவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படமும் ஒரு கேங்ஸ்டர் கதை என சொல்லப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாகவும், இந்த படம் முடிந்ததும் யாஷ் மீண்டும் கேஜிஎஃப் 3 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.