ரன்பீர் கபூர் படத்தில் வில்லனாக நடிக்க சம்மதித்த யாஷ்… ஹீரோயினாக இணையும் சாய் பல்லவி!
யாஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியான படம் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் சாப்டர் 2. சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த பாகத்திற்கான முன்னோட்டமும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து மூன்றாம் பாகம் உருவாக்கப் படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் யாஷ் பாலிவுட் இயக்குனர் நிலேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் ராமாயணம் சம்மந்தப்பட்ட படத்தில் ராவணன் வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதாவாக சாய் பல்லவியும் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது.
மூன்று பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.