வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (08:04 IST)

1650 ஏக்கர் காடுகளை தத்தெடுக்கின்றார் ‘பாகுபலி’ நடிகர்: பரபரப்பு தகவல்

1650 ஏக்கர் காடுகளை தத்தெடுக்கின்றார் ‘பாகுபலி’ நடிகர்
நூற்றுக்கணக்கான ஹீரோக்கள் திரையில் மட்டுமே ஹீரோக்களாக இருந்தாலும் ஒரு சிலர் மட்டும் திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்விலும் ஹீரோக்களாக உள்ளனர். அந்த வகையில் பாகுபலி ஹீரோ பிரபாஸ் அவர்கள் ஐதராபாத்தில் புறநகரில் உள்ள 1650 ஏக்கர் காடுகளை தத்தெடுக்க முன்வந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஐதராபாத் அருகிலுள்ள துண்டிகல் என்ற பகுதியில் காசி பள்ளி ரிசர்வ் காடுகள் உள்ளன. இந்த காடுகளை அபிவிருத்தி செய்வதற்காக வனத்துறை அதிகாரிக்கு ரூபாய் 2 கோடி காசோலையை நடிகர் பிரபாஸ் வழங்கியுள்ளார். இந்த காடுகளை அபிவிருத்தி செய்வதற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடந்தது
 
பிரபாஸ், தெலுங்கானா வனத்துறை அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்பட பலர் இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டனர். பிரபாஸ் தத்து எடுத்து உள்ள இந்த காடுகள் மருத்துவ தாவரங்களுக்கு பெயர் பெற்றது என்றும் 1650 ஏக்கர் முழுவதும் வேலி அமைத்து உடனடியாக இந்த பூங்காவை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பூங்காவை வெளியில் இருந்து பார்க்கக்கூடிய அளவில் நடைபாதை மற்றும் வியூபாயிண்ட் அமைக்கப்படும் என்றும் வன அதிகாரிகள் கூறியுள்ளனர் பிரபாஸின் இந்த உதவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது