1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 4 செப்டம்பர் 2019 (13:20 IST)

350 கோடிதான் வசூலா? பத்தவே பத்தாது.. புளம்ப விட்ட சாஹோ!!

சாஹோ ஐந்து நாட்களில் ரூ.350 கோடி வசூலித்தும் பட தயாரிப்பு குழு மகிழ்ச்சியில் இல்லை என தெரிகிறது. 
 
பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிய சாஹோ திரைப்படம் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, என 4 மொழிகளில் வெளியானது. அதிரடி ஆக்சன் கதைக்களத்தளமான இந்த படத்தை சுஜித் இயக்க வம்சி கிருஷ்ணா ரெட்டி ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்தார். 
 
மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகிய இப்படம் நிறைய நெகட்டிவான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் ஐந்து நாட்களில் ரூ.350 கோடி வசூலித்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது. போட்ட பட்ஜெட்டை திருப்பி எடுத்துள்ளது சாஹோ படம். 
ஆனால், ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.600 கோடி வசூல் செய்யும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தயாரிப்பு குழுவிற்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லையாம்.  
 
இனிவரும் நாட்களில் படத்தின் எதிர்மறையான விமர்சனங்களை மீறி ரசிகர்கள் தியேட்டருக்கு வந்தால் மட்டுமே விநியோகிஸ்தர்களுக்கும் லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.