செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 31 ஆகஸ்ட் 2019 (13:29 IST)

"சாஹோ" தேறுமா தேறாதா..? முதல்நாள் வசூலை கண்டு அஞ்சிய விநியோகிஸ்தர்கள்!

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிய "சாஹோ" திரைப்படம் தமிழ்,மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என்று 5 மொழிகளில் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியது. 


 
அதிரடி ஆக்சன் கதைக்களத்தில் வந்திறங்கியுள்ள இப்படத்தை சுஜித் இயக்க வம்சி கிருஷ்ணா ரெட்டி  ரூ.250 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்தார்.  இப்படத்தின் மூலம்  தென்னிந்திய சினிமாவிற்கு பாலிவுட் உச்ச நடிகை ஷ்ரத்தா கபூர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். 
 
மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகிய இப்படம் நிறைய நெகட்டீவான விமர்சனங்களை பெற்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை உடைத்துவிட்டது. ஆனால் அதையெல்லாம் மீறி முதல் நாள் வசூல் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்ததாக கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 
 
அந்த வகையில் முதல் நாள் வசூலாக தமிழ் நாட்டில் ரூ. 4 கோடி ரூபாயும், சென்னையில் மட்டும் சென்னையில் ரூ. 1 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதகவும் கூறப்படுகிறது. இந்திய அளவில் இந்தி மொழியில் மட்டும்  ரூ. 24 கோடியும், தெலுங்கில் ரூ.25 கோடியும் வசூலாகி இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆக மொத்தம் உலக அளவில் முதல் நாள் வசூல் ரூ.80 கோடி வரை வசூல் செய்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
இனிவரும் நாட்களில் படத்தின் எதிர்மறையான விமர்சனங்களை மீறி ரசிகர்கள் தியேட்டருக்கு வந்தால் மட்டுமே  போட்ட முதலீட்டை எடுக்கமுடியும் என விநியோகிஸ்தர்கள் கூறுகின்றனர். இல்லையென்றால் மிகப் பெரும் நஷ்டத்தை சந்திக்கவேண்டிருக்கும் என முதலீடு செய்த விநியோகிஸ்தர்கள் அச்சப்படுகின்றனர்.