1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (12:34 IST)

உலகம் முழுவதும் ஒரே நாளில் வெளியாகும் 'சாஹோ' - சாதனை படைக்குமா?

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடித்து வரும் படம் சாஹோ. பாலிவுட் டாப் நடிகை ஷ்ரத்தா கபூர் பிரபாஸுக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்க,  இவர்களுடன் ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, அருண் விஜய், ஈவ்லின் சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


 
சுஜீத் இயக்கத்தில் உருவாகும் இப்படம் ரூ.250 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாகவுள்ளது. அண்மையில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் வரும் 30-ம் தேதி இப்படம் உலகம்  முழுவதும் ஒரே நேரத்தில்  பிரமாண்டமாக வெளியாகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 
 
பொதுவாக இந்தியாவில் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாகவே அமெரிக்காவில் பிரிமீயர் காட்சிகளைத் திரையிடுவது வழக்கம். ஆனால், அதை இந்த முறை தவிர்த்துவிடலாம் என 'சாஹோ' குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம்.
 
இதற்கான காரணம் என்னவென்றால்,  எதிர்மறையான விமர்சனங்கள் முதலில் வெளிவராது. மேலும், இந்தியாவில் முதல் காட்சி திரையிடுவதற்கு முன்பே வேறெங்கும் படத்தின் கதை என்ன என்பதும் தெரியவராது. எனவே உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் படத்தின் காட்சியை வெளியிட்டால் நிச்சயம் வசூலுக்கு பாதிப்பு வராது என்பதால் இப்படி திட்டமிட்டுள்ளார்களாம். எனவே கூடிய விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.