வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 31 அக்டோபர் 2017 (11:29 IST)

சன்னிலியோனுக்கு போட்டியாக குதித்த மற்றுமொரு ஆபாச நடிகை

கனடா நாட்டில் ஆபாச நடிகையாக இருந்த சன்னிலியோன் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் நிலையில் அவருக்கு போட்டியாக அமெரிக்காவை சேர்ந்த ஆபாச நடிகையான மியா காலிஃபா இந்திய திரையுலகில் அறிமுகமாகவுள்ளார்.



 
 
கடந்த ஆகஸ்ட் மாதம் மலையாளத்தில் வெளியான  Chunkzz என்ற படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க மியா காலிஃபாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இவர் இந்த படத்தின் மூலம் இந்திய திரையுலகில் அறிமுகமாவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
 
கடந்த 2014ஆம் ஆண்டு அமெரிக்காவின் நம்பர் ஒன் ஆபாச நடிகை என்ற இடத்தில் இருந்த மியா தற்போது ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு வெப்கேமிரா மாடலாக உள்ளார். இந்த நிலையில் இந்திய திரையுலகில் சன்னிலியோன் போன்று முன்னணி நடிகையாகும் நோக்கத்தில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது. உமர் லுலு இயக்கவுள்ள இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த ஹனிரோஸ், பாலுவர்கீஸ் ஆகியோர்களும் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.