திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 27 அக்டோபர் 2017 (11:33 IST)

பிரபல தொலைக்காட்சியில் தினமும் உடற்பயிற்சி கற்றுத்தரும் சன்னி லியோன்

தொலைக்காட்சியில் உடற்பயிற்சி சொல்லித்தரும் நிகழ்ச்சியை பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன் நடத்த உள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

 
பிரபல நீலப்பட நடிகையாக அறியப்பட்டவர் சன்னி லியோன். அவருக்கென ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது  சினிமாவையும் கலக்கி வருகிறார் சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கவந்த சன்னி லியோனைப் பார்க்க, கூட்டம் அலை எனத் திரண்டதை நாம் மறக்க முடியாது.
 
ஜெய், ஸ்வாதி நடிப்பில் வெளியான ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ள சன்னி லியோன், ஹிந்தி உள்ளிட்ட  பல்வேறு மொழிகளில் ஒரு பாடலுக்கு நடனமாடி வருகிறார். தற்போது சினிமாவில் பிஸியாக உள்ளார்.
 
இந்நிலையில், ‘எம்டிவி பீட்ஸ்’ என்ற சேனலில் தினமும் காலையில் உடற்பயிற்சி கற்றுத்தர இருக்கிறார் சன்னி லியோன். இந்த நிகழ்ச்சிக்கு ‘பிட் ஸ்டாப்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. நவம்பர் 24ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக  இருக்கிறது. இசையோடு கூடிய இந்த உடற்பயிற்சிகள், செய்பவரை வியர்க்க வைக்கும் என்கிறார்கள்.