வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : புதன், 14 ஜூன் 2023 (15:39 IST)

"லியோ" படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் நட்சத்திரம் - மிகுந்த ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

விஜய் நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். 
 
படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் சென்று முக்கியமானக் காட்சிகளை படமாக்கி சென்னை திரும்பியுள்ளனர். இதையடுத்து சென்னையில் அடுத்த கட்ட ஷுட்டிங் தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது லியோ படத்தின் கேமியோ ரோலில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.