வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 26 ஆகஸ்ட் 2023 (11:11 IST)

துணிக்கடை திறப்பு விழாவுக்கு வந்த பூஜா ஹெக்டே.. குவிந்த ரசிகர்களால் திணறிய டிராபிக்..!

ஆந்திர மாநில கடப்பாவில் உள்ள தனியார் துணிக்கடை திறப்பு விழாவிற்கு நடிகை பூஜா ஹெக்டே வந்ததை எடுத்து அந்த பகுதியில் டிராபிக் அதிகமானதால் பெரும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது 
 
விஜய் நடித்த பீஸ்ட் உட்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை பூஜா ஹெக்டே. இப்போதும் கூட அவர் முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகி ஆக நடித்து வருகிறார். 
 
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள தனியார் துணிக்கடை திறப்பு விழாவிற்கு அவர் நேற்று வருகை தந்தார். அப்போது நடிகை பூஜா ஹெக்டேவை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் அந்த பகுதியில் டிராபிக் பிரச்சனை ஏற்பட்டது. 
 
இரு பகுதியிலும் நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றதால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனை அடுத்து போக்குவரத்து போலீசார் உடனடியாக போக்குவரத்தை சரி செய்தனர். பூஜா ஹெக்டேவை பார்க்க ரசிகர்கள் குவிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 
Edited by Mahendran