திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2023 (14:11 IST)

விஜய் பட நடிகை அவதூறு பதிவிட்ட நபருக்கு வக்கீல் நோட்டீஸ்

cinema
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை பூஜா ஹெக்டே தன் மீது அவதூறு பரவியவர் மீது வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர்  பூஜா ஹெக்டே. இவர், தமிழில் முகமூடி என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன்பின்னர், முகுந்தா,துவடே ஜனநாதம், ரங்கஸ்தளம், சக்‌ஷியம், சர்க்கஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு இவர் விஜய் ஜோடியாக நடித்த பீஸ்ட் படம்  வெளியானது. தற்போது, இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், மும்பையைச் சேர்ந்த ஒருவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,’’ பிரபாஸுடன் நடித்த ராதே ஷ்யாம், சிரஞ்சீவியுடன் நடித்த ஆச்சார்யா,இந்தியில் நடித்த சர்க்கஸ் படமும் ஓடவில்லை. சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடிக்க படமும் கைவிடப்பட்டது. இதனால், முன்னணி நடிகர்கள் அவரை படங்களில் நடிக்கவைக்க முன்வரவில்லை என்பதால்  பூஜா ஹெக்டே மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதாக’’ பதிவிட்டிருந்தார்.

இதைப் பார்த்து கோபமடைந்த பூஜா ஹெக்டே, அந்த  நபருக்கு தன்னைப் பற்றி அவதூறு பதிவிட்டதற்காக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.