அப்படி நடந்தால் தூக்கில் தொங்க தயாரா ? – மோடிக்கு மல்லிகார்ஜுனா கார்கே கேள்வி !

Last Updated: திங்கள், 13 மே 2019 (15:20 IST)
காங்கிரஸ் கட்சி 40 இடங்களுக்கு மேல் வென்று விட்டால் மோடி தூக்கில் தொங்க தயாரா என மல்லிகார்ஜுனா கார்கே தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி ‘காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத அளவுக்கு சென்ற தேர்தலில் 44 தொகுதிகளில் மட்டுமே வென்றது. ஆனால் இம்முறை அதைவிடவும் கம்மியான தொகுதிகளில்தான் வெல்லும்’ எனக் கூறிவருகிறார்.

இதனால் கோபமடைந்த காங்கிரஸின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே ‘மோடி எங்கு சென்றாலும் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது எனப் பிரச்சாரம் செய்கிறார். காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளுக்கு மேல் வென்றால் மோடி தூக்கில் தொங்குவாரா?’ எனக் கேள்வி எழுப்பினார்.

அவரின் இந்த பேச்சு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. ஒரு மூத்த அரசியல்வாதியிடம் இருந்து இதுபோன்ற கீழ்த்தரமான வார்த்தைகள் வருவது அரசியல் நாகரீகத்துக்கு இழுக்கு எனப் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :