1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 6 ஜனவரி 2021 (11:33 IST)

சென்னையில் மேலும் 3 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு:

சென்னையில் மேலும் 3 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு:
கடந்த 9 மாதங்களாக சீனாவிலிருந்து பரவிவரும் கொரோனா வைரஸ் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் தற்போது பிரிட்டனில் இருந்து உருமாறிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கொஞ்சம் வேகமாக பரவி வருகிறது 
 
ஏற்கனவே இந்தியாவிலும் உருமாறிய கொரோனா வைரஸ் ஒரு சிலருக்கு பரவியுள்ள நிலையில் சென்னையில் மட்டும் தற்போது மேலும் 3 பேருக்கு உருமறிய கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
இங்கிலாந்தில் இருந்து சென்னை திரும்பியவர்களில் நடத்தப்பட்ட பரிசோதனையில் முதலில் ஒரே ஒருவருக்கு மட்டுமே உருமாறிய கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளார்
 
இந்த நிலையில் தற்போது பிரிட்டனில் இருந்து சென்னை திரும்பிய மேலும் இருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இவர்களில் இருந்து இன்னொரு நபருக்கு உருமாரிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மேலும் மூவர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து சென்னையில் மட்டும் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது 
 
புதிய வகை கொரோனா குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை பொது மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது