திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2022 (12:20 IST)

சோழனின் பயணம் ஆரம்பம்..! – ராஜராஜசோழன் போஸ்டர் ரிலீஸ்!

Jayam Ravi
மணிரத்னம் இயக்கி வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் ராஜராஜ சோழன் கதாப்பாத்திரத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள அரச காலத்து படம் “பொன்னியின் செல்வன்”. கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம்.

இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தின் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் போஸ்டரும் ஒவ்வொரு நாளும் வெளியாகி வருகிறது. முன்னதாக நந்தினி, ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், குந்தவை ஆகியோரின் போஸ்டர்கள் வெளியான நிலையில் இன்று கதையின் முக்கிய கதாப்பாத்திரமான ராஜராஜசோழனின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி இந்த படத்தில் ராஜராஜசோழனாக நடித்துள்ளார். இன்று மாலை இந்த படத்தின் டீசர் வெளியாக உள்ள நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த போஸ்டர் வைரலாகியுள்ளது.