திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 7 அக்டோபர் 2022 (15:14 IST)

3 சிறுவர்கள் உயிரிழப்பு விவகாரம்....காப்பகம் மூடப்படுகிறது - அமைச்சர் கீதா ஜீவன் தகவல்

geetha jeevan
திருப்பூர் அருகே 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் காப்பகம் மூடப்படுவதாக அமைச்சர் கீதா ஜூவன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம்  திருமுருகன் பூண்டியில் ஆதரவற்ற குழந்தைகள் விடுதியாகச் செயல்பட்டு வரும்   விவேகானந்தா  சேவாலய விடுதியில் காலை   உணவைச் சாப்பிட்ட 3 சிறுவர்கள் ,  ஒவ்வாமை ஏற்பட்டு, உயிரிழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சமூக  நலத்துறை அமைச்சர், கீதா ஜீவன், செய்தித்துறை அமமைச்சர் மு.பெ.சாமி நாதன் மற்றும் அதிகாரிகள் இன்று அந்த விடுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, மாணவர்கள் தங்கியிருந்த இடம், இறந்து இடம், அவர்களுக்கு வழங்கப்பட்ட உனவு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் கீதா ஜூவன், இந்த விடுதியில் அடிப்படை வசதிகள் இன்றி செயல்படுவதால், காப்பகம் மூடப்படுவதாக அறிவித்துள்ள்ளார்.

Edited by Sinoj