செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 21 மார்ச் 2023 (15:33 IST)

லண்டன் ஸ்டியோவில் பொன்னியின் செல்வன் 2 இசைப் பணிகள்.. ரஹ்மான் வெளியிட்ட புகைப்படம்!

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில் இப்போது படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நடந்துவரும் நிலையில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான அகநக பாடல் வெளியானது. இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் ரஹ்மானும், இயக்குனர் மணிரத்னமும் லண்டனில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் இந்த படத்துக்கான இசைக் கோர்ப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அது சம்மந்தமான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுளார் ரஹ்மான்.